இவர்கள் இந்நாட்டின் விரோதிகள்: இயக்குனர் ரஞ்சித்தின் டுவீட்

Webdunia
செவ்வாய், 10 டிசம்பர் 2019 (20:26 IST)
நேற்று பாராளுமன்றத்தின் மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மசோதாவுக்கு ஆதரவாக பாஜக கூட்டணி கட்சி எம்பிக்கள் ஆதரவாகவும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரும் எதிர்த்தும் ஆவேசமாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக ஒவைசி எம்பி இந்த மசோதாவின் நகலை மக்களவை கிழித்தெறிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
ஆனால் அதே நேரத்தில் இந்த மசோதாவுக்கு எதிராக ஆவேசமாக பேசிய எம்பிக்கள் மசோதா மீதான வாக்கெடுப்பின்போது எதிர்த்து வாக்களிக்காமல் திடீரென மாயமானார்கள். இதனால் மசோதாவுக்கு எதிராக 80 வாக்குகள் மட்டுமே பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த மசோதா குறித்து இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாக்கும் விதிகளுக்கு எதிராக இருக்கும் எந்த இந்தியனும் இந்நாட்டின் நண்பனாகவோ, ஜனநாயகவாதியாகவோ இருக்க முடியாது. அவன் இந்நாட்டின் விரோதி ஆவான்.
 
ரஞ்சித்தின் இந்தக் டுவீட்டுக்கு வழக்கம்போல் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை கமெண்ட்டுகள் மூலம் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக நெகட்டிவ் கமெண்டுகள் அதிகமாக பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்