தனது ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியரை நித்தியானந்தா அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக வெளியான செய்தியை அடுத்து அவரது குஜராத் ஆசிரமம் மூடப்பட்டது. நித்யானந்தாவை கைது செய்ய போலீஸ் முயற்சித்து வரும் வேளையில் அவர் தப்பித்து எங்கோ சென்று இருந்து கொண்டு தனது பக்தர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஆன்மீக சொற்பொழிவு நடத்திக்கொண்டிருக்கிறார்.