வீணா போன எகிப்து வெங்காயம்: சீண்டாத மக்களால் வியாபாரிகள் அப்செட்!

செவ்வாய், 10 டிசம்பர் 2019 (17:35 IST)
வெங்காய தட்டுபாட்டால் இறக்குமதி செய்யப்பட்ட எகிப்து வெங்காயம் விற்பனை ஆகவில்லை என வியாபாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 
 
வெங்காய விலையை கட்டுப்படுத்த எகிப்தில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவு மத்திய அரசு முடிவு செய்தது. இதனை அடுத்து மும்பை துறைமுகத்தில் சமீபத்தில் ஆயிரக்கணக்கான டன் வெங்காயங்கள் எகிப்தில் இருந்து இறக்குமதியாகின.
 
இந்த வெங்காயங்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டன. தமிழகத்திற்கும் அதிகமான அளவில் எகிப்து வெங்காயங்கள் வரத் தொடங்கி உள்ளன. ஆனால், எகிப்து வெங்காயங்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் அவை தேக்கமடைவதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
எகிப்து வெங்காயம் அதிக எடையுடனும், ருசியின்றியும், காரத்தன்னையின்றியும் இருப்பதாக கூறி அவற்றை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்