ஏடிஎம் கொள்ளையனாக மாறிய என்ஜினீயர்! – ராமநாதபுரத்தில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (09:24 IST)
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாரதிநகர் பகுதியில் எஞ்ஜினீயர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் உள்ள ஏடிஎம் ஒன்றை மர்ம நபர் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஏடிஎம் மையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை போலீஸார் ரோந்து பணியில் இருந்தபோது சந்தேகத்திற்கிடமாக திரிந்த நபர் ஒருவரை விசாரிக்க அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். தீவிர விசாரணையில் அவர்தான் ஏடிஎம்மை கொள்ளையடிக்க முயன்றவர் என தெரிய வந்துள்ளது.

ராமநாதபுரம் ஓம்சக்தி நகரை சேர்ந்த சிவசந்திரன் என்னும் அந்த நபர் மதுரையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கொரோனா காரணமாக வேலையிழந்த அவர் வேலை கிடைக்காமல் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்