நாளை வரை கனமழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி “சென்னை மாநகராட்சி சார்பில் 24 மணிநேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு அறை ரிப்பன் மாளிகையில் செயல்படுகிறது; பொதுமக்கள் 1913 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.