பாம்பன் தூக்கு பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு; மண்டபத்தில் ரயில் நிறுத்தம்!

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (08:23 IST)
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் மண்டபத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னையிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் சென்று கொண்டிருக்கும் நிலையில் பாம்பன் பாலத்தின் வழியாகத்தான் ராமேஸ்வரம் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று காலை ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் தூக்கு பாலத்தில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற நிலையில் மண்டபத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்