ராமேஸ்வரத்தை அடுத்து குடும்பத்துடன் காசி சென்ற ஓபிஎஸ்: கட்சிக்காக வேண்டுதலா?
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (13:29 IST)
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சமீபத்தில் ராமேஸ்வரம் சென்று புனித நீராடிய நிலையில் அடுத்ததாக குடும்பத்துடன் காசி சென்று உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் அடுத்தடுத்து நீதிமன்ற வழக்குகளிலும் தோல்வியை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்ற அவர் புனித நீராடினார். இது குறித்த புகைப்படங்கள் வைரலானது
இந்த நிலையில் தற்போது அவர் குடும்பத்துடன் காசி சென்றதாகவும் அங்கு காசி விசுவநாதர் ஆலயம் உள்பட பல்வேறு ஆலயங்களில் அவர் வழிபட இருப்பதாகவும் கூறப்படுகிறது
அதிமுகவில் தனக்கென ஒரு இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக வேண்டுதல் செய்வதற்காக அவர் காசி சென்று இருப்பதாக அவரது தரப்பினர் கூறியுள்ளனர்