தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார் ராஜீவ் ரஞ்சன்!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (08:18 IST)
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார் ராஜீவ் ரஞ்சன்!
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார் இதனையடுத்து அவருக்கு தலைமைச் செயலக ஊழியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த சண்முகம் அவர்கள் நேற்று ஓய்வு பெற்றதை அடுத்து புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டதாக நேற்று தகவல்கள் வெளிவந்தன 
 
இந்த நிலையில் சற்று முன் தமிழக அரசின் 47வது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த 1985ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் ரஞ்சன் தமிழக அரசு மற்றும் மத்திய அரசில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட ராஜீவ் ரஞ்சன் அவர்களுக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்பட அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்