தமிழக அரசின் தலைமைச் செயலாளராக சண்முகம் அவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில் அவர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதனை அடுத்து நாளை முதல் புதிய தலைமைச் செயலாளர் யார் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது