நதிகள் இணைப்புக்கு மீண்டும் வாய்ஸ் கொடுத்த ரஜினிகாந்த்

Webdunia
ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (22:54 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவ்வப்போது அரசியலுக்கு வரப்போவதாக பூச்சாண்டி காட்டி கொண்டிருந்தாலும் இந்த முறை போர் வரும்போது பார்த்து கொள்ளலாம் என்று உறுதியாக கூறியுள்ளார் இதனால் அவரது ரசிகர்கள் ரஜினி விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.

 
இந்த நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தி ஒன்றில், ''இரத்த நாளங்கள் இல்லையென்றால் உடம்பு இயங்காது. நதிகள் பூமியின் இரத்தநாளங்கள்... அதைப் பாதுகாக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை. இந்தியாவிலுள்ள அனைத்து நதிகளையும் ஜீவநதியாக்க சத்குரு எடுக்கும் இந்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்' என கூறியுள்ளார்.
 
ஏற்கனவே நதிகள் இணைப்பிற்கு ரூ.1 கோடி தருவதாக ரஜினிகாந்த் வாக்களித்திருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ரஜினிகாந்த் நதிகள் இணைப்புக்கு குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்