ரஜினி யாரோ சொல்வதை பேசுகிறார் – தேமுதிக வில் இருந்து எதிர்ப்பு!

Webdunia
சனி, 15 பிப்ரவரி 2020 (14:06 IST)
ரஜினி யாரோ சொல்லும் கருத்துகளை பேசுவதாகவும் அதனால் குழப்பம் விளைவதாகவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிகவின் பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் ரஜினிகாந்த் அரசியலில் யாரோ சொல்வதை பேசிக்கொண்டு இருக்கிறார் என சொல்லியுள்ளார்.

அந்த நேர்காணலில் ‘ரஜினி சார் மீது நாங்கள் மிக மிக மரியாதை வைத்திருக்கிறோம். ஏனென்றால் விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் அவர். அவருடன் கூட்டணி வைப்போமே என்பதற்கு இப்போது எந்த பதிலும் இல்லை. இப்போது அவர் வெறும் நடிகர் மட்டுமே. அரசியல்வாதியாக ரஜினி எப்படி இருப்பார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. அவர் இப்போது யாரோ சொல்வதை சொல்கிறார். அதில் ஏதேனும் கேள்வி கேட்டால் விளக்கமளிக்க மறுக்கிறார். ஆனால் அதைப் பற்றி பலரும் பேசி குழப்பத்தைதான் உண்டாக்கிறார்கள். அதனால் தீர்வு கிடைக்கவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்