ரஜினிக்கு நிகர் விஜய் இல்லை, இந்த நடிகர் தான்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சனி, 15 பிப்ரவரி 2020 (13:48 IST)
சமீபத்தில் முக்கிய அரசியல்வாதிகள் அனைவரும் ரஜினிக்கு வருமான வரித்துறையினர் சலுகை செய்திருப்பதாகவும், ஆனால் விஜய்க்கு வருமான வரித்துறையினர் நெருக்கடி கொடுப்பதாகவும் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் ’ரஜினியுடன் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு விஜய் அவருக்கு நிகரானவர் இல்லை என்றும் தெரிவித்தார்
 
மேலும் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்ததில் அரசியல் பின்னணி எதுவும் இல்லை என்றும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் இந்த சோதனை நடந்துள்ளது என்றும் கூறினார்
 
மேலும் ரஜினிக்கு நிகரானவர் அஜித் தான் என்றும் ரஜினி மலை என்றால் அஜித் தல என்றும் அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் இந்த பேட்டிக்கு ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தும், விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் வருவதால் சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்