முதல்வர் கையில் உள்ள காவல்துறையில் சுதந்திரம் இல்லை: ராஜேஸ்வரிபிரியா

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (11:50 IST)
முதல்வர் கையில் உள்ள துறை என்பதனால் சுதந்திரத் தன்மை மிகவும் பாதிக்கபட்டுள்ளது என அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர்ராஜேஸ்வரி பிரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
மது,போதை,ஊழலை ஒழிக்க முன்னெடுப்புகள் எடுக்க அறிவுரை வழங்கிய நீதிபதி அவர்களுக்கு நன்றி.
 
காவல்துறை சுதந்திரமாக தனித்து இயங்ககூடிய துறையாக இருந்தால் நிச்சயம் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கபட்டிருக்கும்.
 
ஆளுங்கட்சியினரின் கைப்பாவையாக இயங்கும் துறைதான் இன்றைய காவல்துறை. ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக போற்றப்பட்ட துறையின் இன்றைய நிலையை நினைத்தால் வேதனையாக உள்ளது. திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆணையிட்டால் செயல்படும் கட்சித் தொண்டர்கள் போல காவலர்கள் செயல்பாடு உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்