2003ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த ஸ்பீட் லிமிட் தற்போது மாற்றப்பட்டுள்ளது என்றும், காவல்துறை, போக்குவரத்துத்துறை, ஐஐடி ஒன்றிணைந்து கமிட்டி அமைத்து, கட்டுப்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் சென்னை காவல் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் பேட்டி அளித்துள்ளார்.
மேலும் நேற்று முதல் புதிய ஸ்பீட் லிமிட் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், நவீன கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது என்றும் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.