கேரளாவில் அதிகரிக்கும் ஸிகா வைரஸ் காய்ச்சல் 7 நீதிமன்ற ஊழியர்களுக்கு பாதிப்பு உறுதி..!

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (11:28 IST)
கேரளாவில் கடந்த சில நாட்களாக ஸிகா வைரஸ் என்ற காய்ச்சல் பரவி வருவதையடுத்து கேரள மாநில அரசு  தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொசுக்களில் இருந்து பரவும் ஸிகா வைரஸ் காய்ச்சல், கேரளாவில் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

இதனை அடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு கேரள மாநில சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும்  ஸிகா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள கண்ணூர் என்ற மாவட்டத்தில் உள்ள 7 நீதிமன்ற ஊழியர்களுக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஸிகா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்