ஆர்.கே.நகரில் அதிமுக பணப்பட்டுவாடா : கண்டுகொள்ளாத ராஜேஷ் லக்கானி?

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (11:12 IST)
சென்னை ஆர்.கே.நகரில் அதிமுக பணப்பட்டுவாடா செய்து முடிக்கும் வரை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி பொறுமையாக காத்திருந்தார் என இணையத்தில் செய்தி உலா வருகிறது.

 
ஆர்.கே.நகரில் தினகரன் தரப்பு பணப்பட்டுவாடா செய்வதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. அந்நிலையில், கடந்த ஞாயிற்றுகிழமை (17.12.2017) அதிமுக தரப்பு ரூ.100 கோடியளவில் பணப்பட்டுவாடா செய்ததாக தொலைக்காட்சிகள் செய்திகள் வெளியிட்டன. பல இடங்களில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட அதிமுக தரப்பு ஆட்களை, திமுக மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் கையும், களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனாலும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பல இடங்களில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதை தட்டிக்கேட்ட மற்ற கட்சியினர் கடுமையாக தாக்கப்பட்டனர். இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்.கே.நகரே களோபரமானது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே போலீசாரும் செயல்பட்டனர். 
 
எனவே, தினகரன் மற்றும் திமுக தரப்பு ஆட்கள் சாலை மறியலில் போராட்டம் நடத்தினர். மேலும், தமிழிசை சவுந்தரராஜன், மு.க.ஸ்டாலின், தினகரன் ஆகியோர் அதிமுக பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக தேர்தல் கமிஷனிடம் புகார் மனு அளித்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. பெயருக்கு வடக்கு இணை ஆணையர் சுதாகரை மாற்ற ராஜேஷ் லக்கானி தற்போது பரிந்துரை செய்துள்ளார். 

மேலும், ஆர்.கே.நகரில் தேர்தல் ரத்து செய்யப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக அனைத்து பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டன. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை. என்ன நடந்தாலும், ஆர்.கே.நகரில் தேர்தல் நடந்தே தீரும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக இருக்கிறது.
 
இந்நிலையில், அதிமுகவினர் ஆர்கே நகரில் முழுமையான பணப்பட்டுவாடாவை முடித்து விட்டார்கள் என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே, வடக்கு இணை ஆணையர் சுதாகரை மாற்ற ராஜேஷ் லக்கோனி பரிந்துரை செய்தள்ளார். பணப் பட்டவாடா குறித்த புகார்கள் எழுந்தபோதே, வடக்கு இணை ஆணையரை ஒரு ஃபேக்ஸ் உத்தரவு மூலம், மாற்ற லக்காணியால் எளிதாக முடியும். ஆனால் அதிமுகவினரின் பணம், தொகுதிக்கு சென்று சேரும் வரை காத்திருந்தார்.


 
வருமான வரித் துறையை சேர்ந்த பார்வையாளராக பத்ரா வருவதற்கு முன்னதாக பணப் பட்டுவாடாவை உறுதி செய்ய வேண்டும் என்பதே லக்கானியிடம் வைக்கப்பட்ட வேண்டுகோள். தற்போது, அதிமுகவுக்கு போட்டியாக, திமுகவோ, டிடிவி தினகரன் அணியோ முயன்றால், அவர்கள் சிக்கிக் கொள்ள வேண்டும் என்பதே லக்காணியின் நோக்கம்.
 
தேர்தல் முடிந்ததும், சுதாகர் மீண்டும் வடக்கு இணை ஆணையராக நியமிக்கப்படப் போகிறார். ஆளுங்கட்சிக்கு வேண்டியவற்றை செய்து தரும் சிறந்த தேர்தல் அதிகாரியாக லக்காணி முழுமையாக மாறி விட்டார்.
 
எரிசக்தித் துறை செயலாளராக, கடந்த ஆட்சியில் நத்தம் விஸ்வநாதனோடு சேர்ந்து கல்லா கட்டிய நபரை தலைமைத் தேர்தல் அதிகாரியாக போட்டால் இப்படித்தான் தேர்தல் நடக்கும்” என இணையத்தில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்