ரேசனின் இரண்டாவது தவணை- முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Webdunia
திங்கள், 31 மே 2021 (15:21 IST)
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

இந்தக் கொரொனா தொற்றிற்கு சாதாரண மக்கள் முதல், அரசியல்தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், சினிமா நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

தற்போது, இந்தியாவில் ஒருநாளில் சுமார் 3  லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.  தமிழகத்தில்  கொரொனா பாதிப்பு குறைந்து வருகிறது.

மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில்  தமிழக அரசு கொரொனா நிதியாக தமிழக முதல்வர் அறிவித்தபடி 4 ஆயிரம், ரூபாய் கொரொனா நிதியில் ரூ.2000 வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 2 வது தவணதைத் தொகை  வழங்குவதற்கான ஆலோசனையை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார்.  மேலும், ரேசன் கடைகளில் 13 வகையான மளிகைப் பொருட்கள் வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துவதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்