தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (19:05 IST)
மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்தது. சென்னையில் நேற்று இரவு காற்றுடன் மழை பெய்தது. இந்நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 2 நாட்களுக்கு மழை பெய்யும். மீனவர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்