முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மீதான வழக்கின் நிலை என்ன?

சனி, 15 செப்டம்பர் 2018 (12:46 IST)
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருப்புப் பணத் தடை சட்டத்தில் ஆஜராக விலக்கு ஆளித்த காலத்தை  சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இங்கிலாந்தில் ரூ.6.17 கோடி மதிப்புடைய  இரண்டு சொத்துக்களையும், அமெரிக்காவில் ரூ.3.28 கோடி மதிப்புள்ள சொத்தையும் மறைத்ததாக எழுந்த குற்றச்சட்டின் அடிப்படையில் கருப்பு பணத்தடுப்பு சட்டத்தின் கீழ் எழும்பூர் நீதிமன்றத்தில்  ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோர் வருமானவரித்துறை புகார் பதிவு செய்தது.
 
அதன் அடிப்படையில், இம்மூவர் மீதும், செஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் மீதும் கருப்பு பணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மலர்விழி இம்மூவரும் தொடர்ந்து ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தார்.
 
அதனை தொடர்ந்து வழக்கை ரத்து செய்யவும் வழக்கில் இருந்து ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் ப.சிதம்பரம், நளினி சிதம்பரம், ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்த நிலையில், இம்மூவரும் செப்டம்பர் 14வரை நேரில் ஆஜராவதிலிருந்து  விலக்கு அளித்தனர்.மறுபடியும் நேற்று (செப்14) மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆஜராக விலக்கு அளித்த காலத்தை அக்டோபர் 12ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டதுடன் , இரு தரப்பு வாதங்களையும்  ஒத்திவைத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்