செப்டம்பர் 1 வரை கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (14:48 IST)
தமிழகத்தில் செப்டம்பர் 1 வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னையின் முக்கிய இடங்களில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது என்பதும் இதனால்  சென்னையின் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என்று கூறியுள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்