சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை! பொதுமக்கள் மகிழ்ச்சி..!

செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (07:44 IST)
சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய கன மழையை கொட்டி தீர்ந்ததால் தட்பவெட்ப நிலை குளிர்ச்சியாக மாறி உள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
சென்னை உள்பட 14 மாவட்டங்களில் நேற்று இரவு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி நேற்று திடீரென சென்னையில் பல பகுதிகளில் கன மழை கொட்டியது. 
 
குறிப்பாக மந்தைவெளி, மயிலாப்பூர், அடையாறு, திருவல்லிக்கேணி, பிராட்வே, தேனாம்பேட்டை, கிண்டி, பட்டினப்பாக்கம், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் விடிய விடிய மழை பெய்தது என்பதும் இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
சென்னையில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகமாக இருந்தது என்றும் 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தந்த நிலையில் திடீரென நேற்று மழை பெய்தது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்றும் சென்னை உள்பட ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்