இன்று 11 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (07:14 IST)
தமிழகத்தில் இன்றைய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 11 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்பதால் அந்த பகுதி மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் அக்டோபர் 18 முதல் 21 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்