நடிகை திரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதற்கு நடிகை திரிஷா, லோகேஷ் கனகராஜ், குஷ்பு, தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் திரிஷாவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
மன்சூர் அலிகான் பாலியல் ரீதியில் அத்துமீறி பேசிய வழக்குத் தொடர்பாக இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திரிஷா வீட்டிற்குச் சென்ற போலீஸார், திரிஷாவிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.