சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அது மட்டுமின்றி இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் ஒரு மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் தேனி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கோவையில் தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள 193 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் கோவை காரமடை ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.