தமிழகத்தில் மழைக்கான ஆரஞ்சு அலர்ட்.. 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை..!

Siva

புதன், 1 மே 2024 (17:02 IST)
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மூன்று மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் இன்று அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 109° பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஒரு சில மாவட்டங்களில் வெப்ப அலை வீசி வருவதால் மதிய நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்னும் மூன்று மணி நேரத்தில் வேலூர் திருப்பத்தூர் திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் மழைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது என்றும் இரவு 7 மணி வரை என்று மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

வேலூர் பகுதியில் இன்று மதியம் பயங்கரமான வெயில் கொளுத்திய நிலையில் மழை பெய்தால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்