தமிழகத்தில் கோடை மழை இன்னும் இருக்குது.. ஜில் அப்டேட் கொடுத்த தமிழ்நாடு வெதர்மேன்..!

Mahendran

சனி, 13 ஏப்ரல் 2024 (08:17 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் இன்னும் சில நாட்கள் கோடை மழை இருப்பதாக ஜில் அப்டேட்டை தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டியெடுக்கும் நிலையில் பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக நேற்று சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மாலை முதல் மிதமான மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்து குளிர்ச்சியான சூழல் உள்ளது. இந்த நிலையில் இது தொடக்கம்தான் என்றும் இன்னும் சில நாட்கள் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்
 
கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வரும் நாட்களில் மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே ஏப்ரல் 14, 15 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னையை பொருத்தவரை வறண்ட வானிலை தான் இருக்கும் என்றும் சில இடங்களில் மட்டும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்