சென்னை உள்பட தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தனது சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஒரு பக்கம் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, இன்னொரு பக்கம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பதும் இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும் என்றும் அதேபோல் புதுச்சேரி பகுதியிலும் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.