வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது: 24 மணி நேரத்தில் என்ன நடக்கும்?

Siva

வெள்ளி, 19 ஜூலை 2024 (07:00 IST)
வங்க கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி இருப்பதாகவும் இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து இருப்பதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் சற்று முன் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் வடக்கு வங்கக் கடலில் உருவான இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து நின்று கொண்டிருப்பதாகவும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாழ்வு பகுதி வடமேற்கு நோக்கி நகர்ந்து வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வடமேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து நாளை ஒடிசா கடற்கரையில் கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Edited by Siva

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்