தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்தில் மிதமான மழை முதல் கனமழை வர பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் நாளை முதல் ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் பகல் நேரத்தில் வெப்பம் இருக்கும் என்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.