இன்று முதல் ஆகஸ்ட் 28 வரை மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Mahendran

வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (14:16 IST)
இன்று முதல் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று அதாவது ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை மிதமான மழை முதல் கன மழை வரை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை இன்று பெய்யக்கூடும் என்றும் அதேபோல் நாளை முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று சில இடங்களில் மட்டும் பகலில் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ALSO READ: தவறான சிகிச்சையால் சிறுவன் கால் அகற்றம்.. சென்னை மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து..!
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்