ஈபிஎஸ் உடன் பேசினாரா ராகுல்காந்தி? தமிழகத்தில் கூட்டணி மாற்றம்?

Webdunia
ஞாயிறு, 3 ஜூலை 2022 (10:18 IST)
ஈபிஎஸ் உடன் பேசினாரா ராகுல்காந்தி? தமிழகத்தில் கூட்டணி மாற்றம்?
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடன் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பேசியதாக கூறப்படுவதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
தமிழக அரசியலில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கடந்த பல ஆண்டுகளாக வலுவாக உள்ளது. இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமியுடன் ராகுல் காந்திதொலைபேசியில் பேசியதாகவும் இதனை அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் பரவியது. 
 
ஆனால் இதுகுறித்து காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் ராகுல்காந்தி பேசியதாக வெளியான தகவல் தவறானது என்றும் தமிழகத்தில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி பலவீனப்படுத்தும் முயற்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வதந்தி மிக வேகமாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்