எம்ஜிஆர் நோக்கத்திற்கு எதிராக ஓபிஎஸ் செயல்பாடு: ஈபிஎஸ் கண்டனம்!

வெள்ளி, 1 ஜூலை 2022 (15:13 IST)
எம்ஜிஆர் நோக்கத்திற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் செயல்பாடுகள் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினரின் செயல்பாடுகள் எம்ஜிஆர் நோக்கத்திற்கு எதிராக இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 378 பக்கங்கள் கொண்ட மனுவில் கூறியுள்ளார்.
 
எடப்பாடி பழனிச்சாமியின் மனுவில் கட்சியின் அடிப்படை நோக்கத்திற்கு எதிராகவும், அதிமுக உருவாக்கப்பட்டதற்கு எதிராகவும் ஓ பன்னீர்செல்வம் செயல்படுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
 
 அதிமுக விவகாரங்களில் முடிவெடுக்கும் உரிமை பொதுக்குழுக் கூட்டத்திற்கே உண்டு என்றும் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார் இதற்கு ஓபிஎஸ் தரப்பிலிருந்து என்ன விளக்கம் அளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்