சிறுவனுக்கு ஹெலிகாப்டரை சுற்றிக்காட்டிய ராகுல்காந்தி

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (18:19 IST)
விமானியாக வேண்டுமென ஆசைப்பட்ட சிறுவனுக்கு ஹெலிகாப்டரை சுற்றிக்காட்டினார் ராகுல்காந்தி. இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

கேரள  சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முன்னாள் காங்கிரஸ் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தி அம்மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

கடந்த சனிக்கிழமை அன்று கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல்காந்தி, ஒரு டீக்கடையில் 9 வயது சிறுவன் அத்வைத்தை சந்தித்தார். அவரிடம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழித்திறனைக் கண்டு ராகுல்காந்தி அவரைப் பாராட்டினார். பின்னர்,  பெரியவனான பின் என்னாக வேண்டுமென ஆசைப்படுகிறார்ய் எனக் கேட்டார். அதற்கு அவர், நான் விமானியாக வேண்டுமென ஆசைப்படுகிறேன் கூறினார் அத்வைத். பிறகு அத்வைத்தை ஏப்ரல் 5 ஆம் தேதி தனது ஹெலிகாப்ட்ரை காண வருமாறு கூறியுள்ளார். அதில் அவரை அழைத்துச் சென்று விமானி அறையான காக்பிட்டுக்கு அழைத்துச் சென்ரு  ராகுல்காந்தி சுற்றிக்காண்பித்து உரையாடினார்.. இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rahul Gandhi (@rahulgandhi)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்