கட்சிச் சின்னம் பொறித்த சட்டை அணிந்து ஓட்டு… உதயநிதி மீது புகார் !

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (18:12 IST)
உதயநிதி ஸ்டாலின் இன்று காலை ஓட்டுப்போட வந்தபோது கட்சிச் சின்னம் பொறித்த  சட்டையுடன் வந்து ஓட்டுப்போட்டதாகவும் இது விதிகளை மீறிய செயல் என்று அதிமுகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசியல்வாதிகள்,அரசியல்தலைவர்கள்,சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்கள் என எல்லோரும் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை ஓட்டுப்போட வந்தபோது கட்சிச் சின்னம் பொறித்த  சட்டையுடன் வந்து ஓட்டுப்போட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணி தலைவர்  உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். இன்று காலை அவர் தனது தந்தை ஸ்டாலின், தாயார் துர்கா ஸ்டாலின், மனைவி கிருத்திகாவுடன் வந்து தேனாம்பேட்டை எஸ்ஐஇடி காலனியில் ஓட்டுப்போட்டது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலின் இன்று காலை ஓட்டுப்போட வந்தபோது கட்சிச் சின்னம் பொறித்த  சட்டையுடன் வந்து ஓட்டுப்போட்டதாகவும் இது விதிகளை மீறிய செயல் என்று அதிமுகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்