இந்த நிலையில் மூத்த கம்யூனிஸ்ட் பிரமுகரும் கேரள மின் துறை அமைச்சருமான ஜாய்ஸ் ஜார்ஜ் என்பவர் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் போது ராகுல் காந்தி ஏன் பெண்கள் படிக்கும் கல்லூரி மட்டுமே சென்று பேசுகிறார்? பெண்களுக்கு தற்காப்பு கலையை கற்று கொடுக்கிறேன் என்று கூறி பெண்களை குனிந்தும் வளைந்தும் நிற்கச் சொல்கிறார்.
பெண்கள் ராகுல்காந்தி அருகே செல்லக்கூடாது, அவரிடம் பேசும் பெண்கள் பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார். இதற்கு கேரள காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்