சென்னை ஐந்து நட்சத்திர ஓட்டல் உரிமையாளர் மர்ம மரணம்.. போலீசார் விசாரணை

Webdunia
ஞாயிறு, 20 நவம்பர் 2022 (09:42 IST)
சென்னை ஐந்து நட்சத்திர ஓட்டல் உரிமையாளர் மர்ம மரணம்.. போலீசார் விசாரணை
பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலான ராடிசன் புளூ ஹோட்டல் உரிமையாளர் அமித் ஜெயின் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
ராடிசன் ப்ளூ ஹோட்டல் உரிமையாளர் மற்றும் தொழிலதிபரான அமித் ஜெயின் காசியாபாத் காமன்வெல்த் விளையாட்டு கிராம சொசைட்டி இல்லத்தில் உயிரிழந்ததாக தெரிகிறது. இது குறித்த தகவலை டெல்லி காவல் நிலையத்திற்கு அவருடைய ஓட்டுநர் தொலைபேசி மூலம் தகவல் அளித்ததை அடுத்து போலீசார் விரைந்து சென்று அமித் ஜெயின் உடலை மீட்டு, அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டதாக தெரிகிறது 
 
இது வரை சந்தேகத்திற்கிடமான எந்த ஒரு தடயமும் சிக்கவில்லை என்றாலும் மர்மமான முறையில் தொழிலதிபர் அமித் ஜெயின் மரணம் அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றான ரேடிசன் புளூ சர்வதேச தரத்தில் உள்ள ஓட்டல்களில் ஒன்றாகும். சென்னை விமான நிலையத்திலிருந்து வெகு அருகில் உள்ள இந்த விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரபலங்கள் பலர் தங்கி இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்