விஷயமரியா வாரிசு: ஸ்டாலினை வாரிவிட்ட உதயகுமார்!

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (12:16 IST)
அரசையும் முதல்வரையும் விமர்சித்து டிவிட்டரில் பதிவிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,42,798 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. 
 
இந்நிலையில் அரசையும் முதல்வரையும் விமர்சித்து, அரசின் தவறுகளால் மாநிலம் முழுக்கவும் கோவிட் 19, முதல்வரின் குழப்பங்களால் எங்கெங்கும் நிதி நெருக்கடி! பல்துறை வல்லுநர்களுடன் உரையாடினேன். தமிழகத்தை மீட்க உதவும் அவர்தம் ஆலோசனைகளை முதல்வரின் கவனத்திற்கு பொறுப்புள்ள எதிர்கட்சியாகக் கொண்டு வருகிறேன் என பதிவிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். 
 
இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பொறுப்புள்ள எதிர்க்கட்சின்னுலாம் அப்புறமா பேசலாம். முதல்ல பொறுப்புள்ள குடிமகனா மாஸ்க்க மாட்டுங்க... #விஷயமரியா_வாரிசு என ஸ்டாலின் புகைப்படத்தை போட்டு கிண்டல் அடித்துள்ளார். 
 
மாஸ்க் அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் கொரோனாவிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனையே அரசும், மருத்துவர்களும் தெரிவித்தும் விழிப்புணர்வு கொடுத்தும் வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்