கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும்! – சுகாதாரத்துறை ஊழியர்கள் போராட்டம்!

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (12:26 IST)
சுகாதாரத்துறை ஊழியர்களை திட்டியதற்கு புதுச்சேரி ஆளுனர் கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் என சுகாதாரத்துறை ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாள் கணக்காக சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டு வரும் சுகாதாரத்துறை அதிகாரிகளை ஆளுனர் கிரண் பேடி திட்டியதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் பேசியதற்கு கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 2 மணி நேரம் வேலை நிறுத்த போராடத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து புதுச்சேரி சட்டமன்றத்தில் பேசியுள்ள சபாநாயகர் சிவக்கொழுந்து, அதிகாரிகளை வன்மையாக பேசியதற்கு கிரண்பேடி வருத்தம் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்