இலவச கல்வி, கலைஞர் பெயரில் காலை சிற்றுண்டி: புதுவை பட்ஜெட்!!

திங்கள், 20 ஜூலை 2020 (13:53 IST)
பட்ஜெட்டிற்கு கிரண்பேடி ஒப்புதல் வழங்காத நிலையில் அவரது எதிர்ப்பை மீறி புதுச்சேரி சட்டப்பேரவையில் 20-21-க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 
 
புதுச்சேரியில் 2020 - 2021 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை கூடியது. காலை 9.30 மணிக்கு துணைநிலை ஆளுநர் உரையாற்றுவார் என கூறப்பட்டிருந்தது.  
 
ஆனால் 9.40 ஆகியும் கிரண்பேடி வரவில்லை. எனவே, கிரண்பேடி இல்லாமல் சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டமன்ற நிகழ்வுகளை துவங்கினார். இருப்பினும் பட்ஜெட் தாக்கல் நண்பகல் 12 மணிக்கு கிரண்பேடி வருகைக்காக ஒத்திவைக்கப்பட்டது.  
 
அப்போதும் அவர் வரவில்லை. எனவே, புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி. பட்ஜெட்டிற்கு கிரண்பேடி ஒப்புதல் வழங்காத நிலையில் அவரது எதிர்ப்பை மீறி புதுச்சேரி சட்டப்பேரவையில் 20-21-க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் அவர் குறிபிட்ட சில முக்கியமானவை பின்வருமாறு... 
 
புதுச்சேரி அரசு பள்ளியில் இறுதியாண்டு படிப்போர் இணையம் மூலம் கல்வி கற்க இலவச லேப்டாப் வழங்கப்படும். 
 
புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரிக் கட்டணம் ரத்து. 
 
அனைத்து கல்விக் கட்டணத்தையும் ரத்து செய்வதுடன் கல்லூரியில் சேர இலவசமாக விண்ணப்பம் வழங்கப்படும். 
 
புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், இலவச குடிநீர் வழங்கப்படும். 
 
புதுச்சேரியில் கலைஞர் கருணாநிதி பெயரில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டித் திட்டம். நவம்பர் 15 ஆம் தேதி முதல் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் துவங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்