அமைச்சருக்கே டெங்கு காய்ச்சலா? அதிர்ச்சியில் புதுவை மக்கள்

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2017 (14:32 IST)
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்து வரும் நிலையில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.



 

 
இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் புதுச்சேரியிலும் பரவி வருவதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தனியார் அமைப்புகள், சமூக நல ஆர்வலர்கள் நிலவேம்பு கசாயம் அளித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இன்று காலை புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் பரவியது. இதுகுறித்து அமைச்சரின் தரப்பில் கூறியபோது அமைச்சர் கந்தசாமிக்கு சாதாரண காய்ச்சல்தான் என்றும் டெங்கு இல்லை என்பது பரிசோதனையில் உறுதியானது என்றும் தெரிவித்தனர். சுகாதார அமைச்சருக்கே டெங்கு காய்ச்சல் பரவியதாக வெளிவந்த செய்தி பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்