பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற சிரமப்படும் பொதுமக்கள்

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2016 (10:59 IST)
செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி புதிய நோட்டுகள் பெற பொதுமக்கள் வங்கியில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.


 

 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை தொடர்ந்து புதிய நோட்டுகள் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. பழைய நோட்டுகளை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் பெற பொதுமக்கள் ஆவலுடன் காலை முதல் காத்திருந்து பெற்று வருகின்றனர்.
 
ஒரு நபருக்கு அதிகபட்ச தொகையாக ரூ.4000 வரை வழங்கப்படுகிறது. இதனால் ஏராளமான பொதுமக்கள் வங்கிக்கு சென்று பழைய நோட்டுகளை மாற்றி வருகின்றனர். ஏராளமான பொதுமக்களிடம் புழங்குவதற்கு ரூபாய் நோட்டுகள் இல்லாததால், அனைவரும் வேலைக்கு செல்லாமல், எல்ல பணிகளையும் விட்டுவிட்டு முதல் வேலையாக ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். 
 
வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு விண்ணப்பப் படிவம் வழங்கப்படுகிறது. அதில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிகையை குறிப்பிட வேண்டும். மாற்று பணத்தில் பழைய 20, 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படுகிறது. அதோடு புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளும் வழங்கபடுகிறது. வங்கிகளில் டெபாசிட் மற்றும் மாற்று பணத்துக்கு என்று தனி தனியாக கவுண்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
பொதுமக்கள் எளிதாக பழைய நோட்டுகளை மாற்ற வங்கி தவிர தபால் நிலையங்களிலும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான பொதுமக்கள் டெபாசிட் முறையை தவிர்த்து வருகின்றனர். இன்றும் ஏடிஎம்கள் செயல்படாத காரணத்தால். பழைய நோட்டுகளையே மாற்றி வருகின்றனர். 
 
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் செயல்படும் வங்கிகளில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 
 
மேலும் சில்லரை தட்டுபாட்டால் இன்றும் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்ய முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். 
அடுத்த கட்டுரையில்