ஆத்துல காந்தம் போட்டா 2 ஆயிரம்.. பைக் சேவைக்கு 5 ஆயிரம்! - கும்பமேளாவில் கல்லா கட்டும் மக்கள்!

Prasanth Karthick

திங்கள், 24 பிப்ரவரி 2025 (13:02 IST)

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவால் ஏராளமான மக்கள் குவிந்துள்ள நிலையில் அப்பகுதி மக்கள் பல வழிகளில் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

 

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடந்து வரும் நிலையில் இந்தியா முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் அங்கு சென்று புனித நீராடி வருகின்றனர். ஏராளமான மக்கள் செல்வதால் ஏற்கனவே அங்கு கூட்ட நெரிசலாக காணப்படுகிறது. இந்நிலையில் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் இருந்து கும்பமேளா நடைபெறும் இடத்திற்கு செல்ல வாகனங்கள் கிடைக்காத நிலையும் ஏற்பட்டுள்ளது. 

 

இதை பயன்படுத்தி அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பயணிகளை கும்பமேளாவிற்கு இருசக்கர வாகனங்களில் அழைத்து சென்று அதற்கு கட்டணம் வசூலித்து வருகின்றனர். இருசக்கர வாகனங்கள் தவிர்த்த பிற வாகனங்கள் செல்ல சிரமம் இருப்பதால் இந்த பைக் டாக்சி சேவைக்கு வரவேற்பு உள்ளதுடன் ரூ.100 தொடங்கி ரூ.5 ஆயிரம் வரை வசூலிக்கின்றனராம்.

 

மேலும் கும்பமேளாவில் நீராடும் பலரும் காசு, துணிகள் போன்றவற்றை நீரில் விடும் நிலையில் அதை சேகரித்தும் சிலர் வருமானம் பார்த்து வருகிறார்கள். தண்ணீரில் காந்தம் போட்டு காசு எடுக்கும் ஒருவர் தினசரி அதன்மூலம் ரூ.2 ஆயிரம் வரை ஈட்டுவதாக கூறியுள்ளார். அதுபோல பூஜை பொருட்கள் விற்பவர்கள் தொடங்கி ரயில் பெட்டிகளில் இடம் பிடித்து தருவதை வரை பல வகையான வேலைகளை செய்து அப்பகுதி மக்கள் வருமானம் ஈட்டி வருகிறார்கள்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்