நான் தான் நிதியமைச்சர்.. முகநூலில் உறுதி செய்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்..!

வியாழன், 11 மே 2023 (10:24 IST)
தற்போது நிதி அமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் வேறு துறைக்கு மாற்றப்படுவார் என்று கூறப்படும் நிலையில் நான் தான் நிதி அமைச்சர் என அவர் முகநூலில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் ஏற்படும் என்றும்  பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்களிடம் இருக்கும் நிதி அமைச்சர் பொறுப்பு தங்கம் தென்னரசு அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிடிஆர் பழனிவேல்ராஜன் தனதுமுகநூல் பக்கத்தில் பயோவை மாற்றி உள்ளார். அதில் அவருக்கு அதில் நிதி மற்றும் மனிதவள  மேலாண்மை துறை அமைச்சர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து நிதி அமைச்சர் துறையோடு மனிதவளம் மேம்பாட்டு துறையும் பி.டி.ஆருக்கு கூடுதலாக அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்