நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை மாற்றமா? பிடிஆர் மாற்றப்படுவரா? தூக்கப்படுவாரா?

திங்கள், 8 மே 2023 (16:45 IST)
தமிழக அமைச்சராக நாளை மறுநாள் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அமைச்சரவையில் இருந்து தூக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. 
 
சமீபத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பேசியதாக ஒரு ஆடியோ இணையதளங்களில் வைரல் ஆனது. அந்த ஆடியோவில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் 30 ஆயிரம் கோடி சம்பாதித்ததாக கூறப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் நாளை மறுநாள் தமிழக அரசு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படும் நிலையில் அதில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் துறை மாற்றப்படும் அல்லது அவர் அமைச்சரவையில் இருந்து தூக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை பிடிஆர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டால் தங்கம் தென்னரசு நிதியமைச்சராக பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.
 
தமிழகத்தில் திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்து இதுவரை இரண்டு முறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் நாளை மறுநாள் செய்யப்படும் அவசரவை மாற்றத்தில் என்னென்ன மாற்றம் இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்