தமிழகத்தின் புதிய நிதியமைச்சர் இவரா? பிடிஆருக்கு எந்த துறை?

புதன், 10 மே 2023 (07:51 IST)
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது என்பதும் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் டிஆர்பி ராஜா புதிய அமைச்சராக இன்று காலை பதவி ஏற்க இருப்பதாகவும் கவர்னர் மாளிகை செய்து குறிப்பு தெரிவித்தது. 
 
இந்த நிலையில் தமிழக நிதி அமைச்சர் ஆக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக மாற்றப்படுவார் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. 
 
மேலும் தமிழகத்தின் புதிய நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இன்று புதிய அமைச்சராக பொறுப்பேற்கும் டிஆர்பி ராஜா அவர்களுக்கு தொழில்துறை மற்றும் முதலீடு ஊக்குவிப்பு துறை வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
கடந்த சில நாட்களாகவே தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக பால்வளத்துறை அமைச்சர் நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்