வியட்நாம் விவசாயிகளை விரட்டியடித்த ட்ரம்ப்! கோல்ஃப் க்ரவுண்ட் கட்ட திட்டம்!

Prasanth K

புதன், 13 ஆகஸ்ட் 2025 (10:39 IST)

வியட்நாமில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குடும்பத்திற்காக கோல்ஃப் மைதானம் அமைக்க விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வியட்நாமில் நிலம் அரசின் உரிமையாக உள்ள நிலையில் அதில் விவசாயிகள் விவசாயம் மேற்கொள்ள மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். நிலம் தொடர்பான உரிமை சார்ந்த முடிவுகளை அரசு மட்டுமே எடுக்க முடியும்.

 

இந்நிலையில் அமெரிக்கா - வியட்நாம் வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஹங் யென் மாகாணத்தில் 990 ஹெக்டேர் நிலத்தில் கோல்ஃப் மைதானம் அமைக்கப்பட உள்ளது. இந்த நிலம் விவசாயிகள் பயன்படுத்தி வரும் நிலமாக உள்ள நிலையில், அவர்களுக்கு சொற்ப பணமும், ரேசன் பொருட்களும் அளித்து வெளியேற்றப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் உலகளவில் பேசு பொருளாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்