பங்குச்சந்தை இன்று மீண்டும் ஏற்றம்.. ஆனால் நேற்று போல் ஏமாற்றிவிடுமா?

Siva

புதன், 13 ஆகஸ்ட் 2025 (09:54 IST)
இந்திய பங்குச்சந்தை நேற்று காலை ஏற்றத்துடன் தொடங்கி, பின்னர் சரிந்தது. இதனால் முதலீட்டாளர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், இன்று மீண்டும் பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் உயர்ந்து காணப்படுகின்றன.
 
இன்றைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்து 80,460 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 93 புள்ளிகள் உயர்ந்து 24,590 புள்ளிகளை எட்டியுள்ளது. சந்தையில் இந்த ஏற்றம் நீடிக்குமா என்பதை முதலீட்டாளர்கள் ஆவலுடன் கவனித்து வருகின்றனர்.
 
இன்றைய வர்த்தகத்தில் அப்போலோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, பாரதி ஏர்டெல், சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், ஜியோ பைனான்ஸ், கோடக் மகேந்திரா வங்கி, ஸ்டேட் வங்கி, ஸ்ரீராம் பைனான்ஸ், சன் பார்மா, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன. அதே சமயம், ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஐ.டி.சி., மாருதி, டி.சி.எஸ்., டெக் மகேந்திரா, டைட்டன் போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிந்து வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்