சென்னையில் ஜூலை 27 வரை தடை: எதற்கு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (07:26 IST)
சென்னையில் ஜூலை 27 வரை போராட்டம், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முதலில் போராட்டம் நடத்தப்படம் களமாக சென்னை தான் உள்ளது. கொரோனா பரவலுக்கு முன் சென்னையில் தினந்தோறும் ஏதேனும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்
 
இந்த நிலையில் சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை என்ற அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் ஜூலை 27 வரை பேரணி, ஆர்ப்பாட்டம், மனிதச்சங்கிலி போராட்டம் உள்ளிட்டவை நடத்த தடைவிதிப்பு என காவல்துறை அறிவித்துள்ளது
 
ஏற்கனவே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் 31ஆம் தேதி வரை அமலில் உள்ளது என்பதும் இதனால் அதிக மக்கள் ஒரே இடத்தில் கூடுவதற்கு அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்