மீண்டும் சிக்கல்...வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு எச்சரிக்கை !

Webdunia
புதன், 19 மே 2021 (22:37 IST)
பிரைவசி பாலிசி விவகாரத்தின் வாட்ஸ் ஆப் இந்திய சட்டத்தை மீறுவதாக உள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

தகவல் பரிமாற்றத்திற்காக உலகம் முழுவதும் 5 பில்லியனுக்கும் அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸப் சமீபத்தில் புதிய நிபந்தனைகள் மற்றும் தனிநபர் கொள்கைகளை வெளியிட்டது. இதன்மூலம் தனிநபர் தகவல்களை வாட்ஸப் சேமிக்கப்போவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து பலர் வாட்ஸப்பை விடுத்து டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளுக்கு மாறி வருகின்றனர். இந்நிலையில் தங்கள் புதிய கொள்கைகள் குறித்து வாட்ஸப் தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் விளக்கமளிக்க பேஸ்புக் நிறுவன அதிகாரிகளுக்கு மத்திய தொழில்நுட்ப துறைக்கான நாடாளுமன்ற குழு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் சர்ச்சைக்கு இடம் கொடுக்கும் புதிய தனியுரிமை பாதுகாப்பு கொள்கைகள் வாட்ஸாப் திரும்ப பெற வேண்டுமென வாட்ஸ் ஆப்பின் தலைமை செயல் அதிகாரிக்கு மத்திய அரசிடமிருந்து கடிதம் அனுப்பப்பட்டது.

இது குறித்து வாட்ஸ் ஆப் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, புது அப்டேட் பேஸ்புக்குடன் தரவுகளை பகிர்வது தொடர்பாக எந்த வசதியையும் வழங்கவில்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். எங்களின் நோக்கம் வியாபாரங்கள் தங்களது வாடிக்கையாளர்கள் சிறப்பான  சேவையை வழங்கி வளர்ச்சி பெறுவதற்கான வசதியை வழங்குவது தான்.

வாட்ஸ் ஆப் எப்போதும் தனிப்பட்ட குறுந்தகவல்களை முழுமையான என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கும். இதனால் வாட்ஸ் ஆப் அல்லது பேஸ்புக் அவற்றை பார்க்க முடியாது. தவறான தகவல் பரவுவதை சரி செய்யவும், எந்த விதமான கேள்விகளுக்கும் பதில் அளிக்க நாங்கள் எப்போதும் காத்திருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மத்திய அரசு சார்பில், தனிநபர் உரிமை சார்பில் வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதில், இந்திய சட்டத்தை மீறுவதாக வாட்ஸ் ஆப்பின் பிரைவசி பாலிசி உள்ளது.  இதுகுறித்து 7 நாட்களுக்கும் வாட்ஸ் ஆப் நிறுவனம் பதிலளிக்க வேண்டும். இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்