பல்லாண்டு தவத்துக்கு இ‌ன்று பலன்-- கஸ்தூரி டுவீட்

புதன், 19 மே 2021 (22:08 IST)
பேரறிவாளளின் தாய் அற்புதம்மாவின் பல்லாண்டு தவத்திற்கு இன்று பலன் கிடைத்துள்ளது என நடிகை கஸ்தூரி டுவீட் பதிவிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைதண்டனை வசித்து வரும் 7 தமிழர்களில் ஒருவர் பேரறிவாளன் என்பது தெரிந்தது. அவரை விடுதலை செய்ய அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த 25 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். இருப்பினும் அவரால் தனது மகன் பேரறிவாளனை விடுதலை செய்ய வைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக பரவி வரும் நிலையில் சிறையில் இருக்கும் சிலருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தனது மகன் ஏற்கனவே ஒரு சில உடல் உபாதைகளால் இருப்பதாகவும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே அவருக்கு நீண்ட விடுப்பு அளிக்க முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இன்று அற்புதம்மாள் அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். மருத்துவ காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டும் என்ற அற்புதமான கோரிக்கையை ஏற்று உத்தரவு பிறப்பித்துள்ளதால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

CM @mkstalin grants Perarivalan long due reprieve. Wow. I am beginning to expect the unexpected from MKS. அற்புதம்மாள் பல்லாண்டு தவத்துக்கு இ‌ன்று பலன் கிட்டியது எனத் தெரிவித்துள்ளார்.

CM @mkstalin grants Perarivalan long due reprieve. Wow. I am beginning to expect the unexpected from MKS. அற்புதம்மாள் பல்லாண்டு தவத்துக்கு இ‌ன்று பலன் கிட்டியது. pic.twitter.com/D5B6YOfKJA

— Kasturi Shankar (@KasthuriShankar) May 19, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்